புதிதாக 6 பேருக்கு கொரோனா!! -40 இலட்சம் மக்கள் கொண்ட நகருக்கே ஊரடங்கு போட்ட சீனா-

ஆசிரியர் - Editor II
புதிதாக 6 பேருக்கு கொரோனா!! -40 இலட்சம் மக்கள் கொண்ட நகருக்கே ஊரடங்கு போட்ட சீனா-

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால் 40 இலட்சம் பேரை மக்கள் கொண்ட லான்ஜோ நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டின் ஹ_பேய் மாகாணம் உகான் நகரில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

இருப்பினும் சீனாவில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு கொரோனா பாதிப்பு தற்போது மெல்ல வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. அந்நாட்டில் நேற்று திங்கட்கிழமை மேலும் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும், 40 இலட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட லான்ஜோ நகரில் புதிதாக 6 பேருக்கு தொற்று பரவியுள்ளது.

இந்நிலையில், புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள லான்ஜோ நகருக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் 40 இலட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட லான்ஜோ நகர மக்கள் அவரச தேவையன்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு