ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!! -படையினர் சுட்டத்தில் 7 பேர் பலி-

ஆசிரியர் - Editor II
ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!! -படையினர் சுட்டத்தில் 7 பேர் பலி-

சூடான் நாட்டில் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றியவர்கள் மீது அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

இச் சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 140 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டின் பிரதமர் அப்துல்லா அமடொக் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மக்கள் ஆட்சி கலைக்கப்பட்டதாக இராணுவ தளபதி ஜென்ரல் அப்டெல் பற்றா பேஹான் நேற்று திங்கட்கிழமை அறிவித்தார்.

இதனால் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைநகர் காட்டோமில் ஆயுதம் தரித்த பாதுகாப்பு படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு