கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தது நோபோலிலா? -ரசிகர்கள் கடும் சீற்றம்-

ஆசிரியர் - Editor II
கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தது நோபோலிலா? -ரசிகர்கள் கடும் சீற்றம்-

நேற்று நடந்த போட்டியில் கே.எல் ராகுலை  சஹீன் அப்ரீதி ஆட்டமிழக்க செய்த பந்து நோபோல் என சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

சஹீன் அப்ரீதி நோபோல் வீசினார் என்பதை காண்பிக்கும் வீடியோக்களும், படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

அப்ரீதி தனது முதல் 2 ஓவர்களில் இந்திய  அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து அப்ரீதி இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தார்.

எனினும் கே.எல்ராகுலை அவர் ஆட்டமிழக்க செய்த பந்து நோபோல் என சுட்டிக்காட்டியுள்ள ரசிகர்கள் நடுவர் உறங்கிவிட்டாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


ஏன் எவரும் இது பற்றிப் பேசவில்லை இது ஒரு நோபோல் என டுவிட்டரில் ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது எப்படி நோபோல் இல்லாமலிருக்க முடியும் என மற்றுமொரு ரசிகர் கேள்வி எழுப்பியுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு