ஆதரவற்ற 8 குழந்தைகள் பட்டினியால் மரணம்!! -ஆப்கானில் பரிதாபம்-

ஆப்கான் தலைநகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் பட்டினியால் இறந்த 8 ஆதரவற்ற ஹசாரா சிறுபான்மை இன சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டு முன்னாள் பாராளுனமன்ற உறுப்பினரும் ஹசாரா இன அரசியல் தலைவருமான முகமது மொஹாகிக் தெரிவித்துள்ளார்.
காபூலின் 13 ஆவது வட்டாரத்தில் உள்ள ஒரு பகுதியில் இந்தச் சிறுவர்கள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று தனது முகப்புத்தகத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
குறித்த சிறுவர்களின் உடல்களை அந்தப் பகுதி முஸ்லிம் மத தலைவர் மற்றும் அயலவர்கள் இணைந்து புதைத்ததாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.