SuperTopAds

சீன – ரஷ்ய படைகளுக்கு இடையில் கடலில் போர் பயிற்சி!!

ஆசிரியர் - Editor II
சீன – ரஷ்ய படைகளுக்கு இடையில் கடலில் போர் பயிற்சி!!

முதற்தடவையாக சீனாவும் ரஷ்யாவும் இணைந்து பசுபிக் கடற்பிராந்தியத்தில் போர் பயிற்சியை நடடித்தி வருகின்றது. 

சீனாவிற்கு எதிராக இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உருவாக்கிய கூட்டமைப்பின் வல்லமையை காண்பிக்கும் வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் தென் சீன கடற்பரப்பில் கூட்டு ரோந்துப் பணி முன்னெடுக்கப்பட்டதன் பின்புலத்தில் இந்த போர் பயிற்சி ஆரம்பமாகியுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடந்த 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சீன – ரஷ்ய கூட்டு ரோந்து போர் பயிற்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சீன மற்றும் ரஷ்ய யுத்த கப்பல்கள் பசுபிக் சமுத்திரத்தின் மேற்கு கடற்பரப்பில் இந்த ரோந்து பணியில் ஈடுபட்டன. இதற்கு முன்னர் சீனாவும் ரஷ்யாவும் ஜப்பான் கடற்பரப்பிலும் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.