யாழ்.நீர்வேலி வாள்வெட்டு சம்பவம் அயல் வீட்டாரே வாள்வெட்டு குழுவை கூலிக்கு அமர்த்தி வாள்வெட்டு நடத்தினார்..! விசாரணை தீவிரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நீர்வேலி வாள்வெட்டு சம்பவம் அயல் வீட்டாரே வாள்வெட்டு குழுவை கூலிக்கு அமர்த்தி வாள்வெட்டு நடத்தினார்..! விசாரணை தீவிரம்..

யாழ்.நீர்வேலி - பூதர்மடம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் அயல் வீட்டாரினால் கூலிக்கு அமர்த்தப்பட்ட வாள்வெட்டு குழுக்களாலேயே நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட வீட்டார் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

4 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ரவுடிகள் வாள்கள், கம்பிகள், போத்தல் ஓடுகள் போன்றவற்றுடன் வீட்டுக்குள் புகுந்த ரவுடிகள் 58 வயதான முதியவர் மீதும், வாகனங்கள், மற்றும் வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றனர்.  

கோப்பாய் சந்தியில் பாதுகாப்பு பணியில் இராணுவம் இருந்தபோதும் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட  வீட்டார் கூறியுள்ளனர். 

மேலும் அயல் வீட்டில் உள்ள ஒருவருடன் ஏற்பட்ட வாய்தர்க்கத்தை தொடர்ந்து வாள்வெட்டு குழு ரவுடிகளை கூலிக்கு அமர்த்தி இந்த தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். 

அத்துடன் குறித்த வீட்டுக்கு முன்னால் உள்ள பழகடை வியாபாரம் நிலையமும் சேதமாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வீட்டுக்கு அருகில் உள்ள இளைஞனுக்கு இடையில் சிறு வாய்த்தர்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது. 

இதற்கு பழிவாங்குவேன் என சபதம் போட்ட நபர் ரவுடிகளை கூலிக்கு அமர்த்தி இந்த வன்செயலை புரியவைத்துள்ளார். சம்பவத்தில் கதிர்காமநாதன் குணரட்ணசிங்கம் வயது(58) என்ற முதியவர் ரவுடிகளின் தாக்குதலில் காயமடைந்து

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வன்முறை சம்பவத்தினை மேற்கொண்ட குழுவினர் வந்த மோட்டார் சைக்கிள் இலக்கம் 

அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Radio