யாழ்.போதனா வைத்தியசாலை வழமைக்கு திரும்பிவிட்டது..! பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வழங்கிய தகவல்..

யாழ்.போதனா வைத்தியசாலை செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியிருக்கும் நிலையில் மக்கள் தமது மருத்துவ தேவைகளுக்காக தினசரி வந்துபோகும் இயல்புநிலை வந்துள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, கொவிட் தாக்கம் குறைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. இருப்பினும் கொவிட் சிகிச்சைக்கான அதி தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மூன்று விடுதிகள் இயங்கிய வண்ணம் உள்ளன
கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கான சிகிச்சை வசதிகள் தற்போதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது ஆகவே பொதுமக்கள் அவர்களுக்கு கடுமையான வருத்தங்கள் ஏதாவது பிரச்சனைகள் இருப்பின்
வைத்தியசாலைகளை நாடவேண்டும் அருகிலுள்ள வைத்தியசாலைகள் அல்லது போதனா வைத்தியசாலைக்கு வந்து தங்களுடைய வருத்தங்கள் சம்பந்தமாக ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதேவேளை அனைவரும் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள வேண்டும் தடுப்பூசியினை பெறாத நிலையில் அவர்களுக்கு ஏதாவது சிகிச்சைகளுக்கு ஏதாவது வைத்திய தேவைக்காக வர வேண்டுமாக இருந்தால்
அவர்கள் வரமுடியும் தடுப்பூசி போடாதவர்கள் என்ற ரீதியில் அவர்களை நாங்கள் பிரித்து பார்ப்பதில்லை அவர்களுக்கும் ஏனையவர்கள் போன்று சகல விதமான சிகிச்சைகளை மேற் கொள்ளப்படுகின்றது
குறிப்பாக வயோதிபர்கள் இளம் வயதினர் சிலர் தமக்கு விருப்பமான தடுப்பூசியைப் போட வேண்டும் என்ற நோக்கில் தாமதப்படுத்தி தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளாது விடாது தமக்குரிய தடுப்பூசியினை
விரைவில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.