இந்தியாவுக்கு 6 ஆவது பந்து வீச்சாளர் அவசியம்!! -கூறுகிறார் ரோகித் சர்மா-

ஆசிரியர் - Editor II
இந்தியாவுக்கு 6 ஆவது பந்து வீச்சாளர் அவசியம்!! -கூறுகிறார் ரோகித் சர்மா-

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தலைவராக ரோகித் சர்மா செயற்படவுள்ளார். இந்நிலையில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

சகலதுறை ஆட்டக்காரான ஹர்திக் பாண்ட்யா நல்ல நிலையில் வந்திருக்கிறார். ஆனால் அவர் பந்துவீச இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்று நினைக்கிறேன். 

ஏனெனில் வலை பயிற்சியில் அவர் பெரிய அளவில் பந்து வீசவில்லை. ரி-20 உலக கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் விளையாடும் போது 100 சதவீதம் உடல்தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். சில தினங்களில் அவர் பந்துவீச்சை தொடங்கி விடுவார் என்று நம்புகிறேன். 

எமது அணியில் உள்ள பிரதான பந்து வீச்சாளர்கள் திறமை மிக்கவர்கள். ஆனாலும் அணியில் 6 ஆவதாக ஒரு பந்து வீச்சாளர் இருப்பது அவசியமாகும். பகுதி நேரமாக 6 ஆவதாக பந்து வீசும் வாய்ப்புக்குரிய வீரர் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். 

அணியின் சரியான கலவை பாதிக்கப்பட்டு விடுமோ என்று கவலைப்படவில்லை. 5 பவுலர்களுடன் இறங்கினாலும் கூட, எங்களது பந்து வீச்சு தரமானது தான். ஆனால் ஏதாவது ஒரு பந்து வீச்சு அடிபடும் போது நெருக்கடியை குறைக்க பகுதி நேர பவுலர் தேவையாகும் என்றார்.


Radio