திடீர் மரண விசாரணை அதிகாரி மீது 14 பேர் கொண்ட ரவுடிக் குழு தாக்குதல்! வடக்கில் தொடரும் ரவுடிகள் அட்டசாகம்..

ஆசிரியர் - Editor I
திடீர் மரண விசாரணை அதிகாரி மீது 14 பேர் கொண்ட ரவுடிக் குழு தாக்குதல்! வடக்கில் தொடரும் ரவுடிகள் அட்டசாகம்..

மருத்துவமனைக்குள் மதுபோதையில் நுழைந்து கும்பல் திடீர் மரண விசாரணை அதிகாரி மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. 

குறித்த சம்பவம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றிருக்கும் நிலையில் காயமடைந்த திடீர் மரண விசாரணை அதிகாரி

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

பரந்தன் குமரபுரம் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமயம் உயிரிழந்துள்ளார். 

குறித்த நபரின் சடலத்தின் மாதிரி பி.சி.ஆர் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு நேற்றுமுன்தினம் 7 மணியளவில் அதற்கான முடிவு வெளியாகியது. இந்நிலையில் 9.39 மணியளவில் 

வைத்தியசாலைக்கு சென்ற கிளிநொச்சி பரந்தன் பகுதியில் விருந்தினர் விடுதி ஒன்றினை நடத்திவரும் விடுதி உரிமையாளர் உள்ளிட்ட 14 பேர் கொண்ட குழுவினர் மதுபோதையில் தொலைபேசியில் 

திடீர் மரண விசாரணை அதிகாரியை அழைத்து குறித்த சடலத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறுகோரி வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். தொடர்ந்து குறித்த திடீர் மரண விசாரணை அதிகாரி மீது 

வைத்தியசாலை வளாகத்தில் வைத்து தாக்குதல் நடத்தியதுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் காயமடைந்த திடீர் மரண விசாரணை அதிகாரி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக நலன் சார்ந்து மாவட்டத்தின் மக்கள் நலன் சார்ந்தும் செயல்படும் ஒரு சமூக செயற்பாட்டாளர் மீது இவ்வாறான தாக்குதல் 

மேற்கொள்ளப்பட்டுள்ளது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் வன்மையாக கண்டித்துள்ளனர். குறித்த திடீர் மரண விசாரணை அதிகாரி கொவிட் தொற்று காலங்களிலும் தன்னலம் பாராது 

விசாரணைகளை மேற்கொண்டு சடலங்களை விடுவிப்பதில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் செய்யப்பட்ட ஒரு சிறந்த சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மது போதையில் சென்ற குழுவினர் இவ்வாறு தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பல்வேறு பொது அமைப்புக்களும் தமது கண்டனங்களை கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிலை முன்னிலைப்படுத்த உள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் சற்றுமுன் தெரிவித்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு