SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் 5 இடங்களில் அடுத்தடுத்து வழிப்பறி..! கொள்ளை கும்பல் சிக்கியது, கொள்ளையடித்த நகை வாங்கியவரும் சிக்கினார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 5 இடங்களில் அடுத்தடுத்து வழிப்பறி..! கொள்ளை கும்பல் சிக்கியது, கொள்ளையடித்த நகை வாங்கியவரும் சிக்கினார்..

யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுவந்த கும்பல் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கிறது. 

சுன்னாகம், அச்சுவேலி, வட்டுக்கோட்டை உள்ளிட்ட 5 இடங்களில் மேற்படி குழு வீதிகளில் பயணிப்போரின் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளது. 

கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பலை சேர்ந்த 4 பேரும் தெல்லிப்பழை மற்றும் ஏழாலை பகுதிகளை சேர்ந்த 20 வயது தொடக்கம் 25 வயதிற்குட்பட்டவர்கள்

என பொலிஸார் தொிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் கொள்ளையடித்த நகைகளை வாங்கிய சுன்னாகத்தில் உள்ள நகைக்கடை 

உரிமையாளரும் 6 பவுண் நிறையுடைய 5 சங்கிலிகளுடன் கைது செய்யப்பட்டார் வழிப்பறி கொள்ளையர்களின் 2 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டிருக்கின்றது. 

அச்சுவேலியில் கடந்த 16ம் திகதி வீதியால் பயணித்த பெண்ணின் தங்க சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம், 

இளவாலை மற்றும் சுன்னாகம் பகுதிகளிலும் 16ம் திகதி வீதியால் சென்ற இருவரின் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. 

இந்த சம்பவங்கள் தொடர்பில் இளவாலை மற்றும் அச்சுவேலி பொலிஸ் நிலையங்களில் வழங்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் 

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரின் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்ஸிஸ் பொலிஸ் பிரிவினர் கொள்ளை கும்பலை கைது செய்துள்ளனர். 

முதலில் இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் மருதனார்மடத்தில் வியாபாரி ஒருவரிடமும், வட்டுக்கோட்டையில் ஒருவரிடமும் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். 

மேலும் கொள்ளையடித்த நகைகளை சுன்னாகத்தில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்தமையும் தொியவந்துள்ளது. 

இதனடிப்படையில் நகைக்கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.