வர்த்தக நிலையத்தில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த முதியவர் மீது ரவுடிகள் தாக்குதல்..!
வர்த்தக நிலையத்தில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்த்தர் மீது இனந்தொியாத குழுவினர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் தலை மற்றும் கை, கால்களில் காயமடைந்த த.விஜயகாந்த் (வயது47) என்பவர்
பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சோி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.
சம்பவம் தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக முகமாலை பகுதியில். சட்டவிரோத செயற்பாடுகள் களவுகள் போன்ற இடம்பெற்று வருவதுடன், தற்பொழுது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலை தொடர்பில் கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இதனை உரியவர்கள் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் வேண்டுகோள் வருகின்றனர்.