யாழ்.குடாநாட்டின் மத்திய பகுதியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! விரைவில் மேலதிக ஆய்வுகளை நடத்த அரசு முஸ்தீபு..

யாழ்.குடாநாட்டின் மத்திய பகுதியில் எண்ணெய் வளம் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரச உயர்மட்டத்தை மேற்கோள் காட்டி அச்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி எண்ணெய் வள ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு நிறுவனம் ட்ரோன் மூலம் நடத்திய ஆய்வில் குடாநாட்டின் மத்திய பகுதியில் எண்ணெய் படிமங்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக மேலதிக ஆய்வுகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் எண்ணெய் வள படிமங்கள் தொடர்பான ஆய்வுகளை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைப்பது குறித்தும் ஆராயப்படுகின்றது.
முன்னதாக மன்னார் - பேசாலை எம்-2 என அழைக்கப்படும் பகுதியில் 2000 மில்லியன் பீப்பாய் கனிய எண்ணெய் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதாக
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்திலும் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.