யாழ்.பருத்தித்துறையில் வீட்டு பூசைக்கு படைத்த உணவை சாப்பிட்ட முதாட்டி மயங்கி விழுந்து மரணம்..!

யாழ்.பருத்தித்துறை - கரணவாயில் வீட்டுப் பூசை வழிபாட்டின் பின்னர் சுவாமிக்கு படையலிடப்பட்ட அவல், கடலையை உட்கொண்ட மூதாட்டி மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு கரணவாய் - அந்திரன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் ஆறுமுகம் யோகம்மா (வயது - 82) என்பவரே உயிரிழந்தார்.
நவராத்திரி விழா வீட்டுப் பூசை தினமான நேற்று முன்தினம் வீட்டில் நடைபெற்ற வழிபாட்டின் பின்னர் சுவாமிக்கு படையிலிடப்பட்ட அவல், கடலை என்பவற்றை
உண்டபோதே குறித்த மூதாட்டிமயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.