வியாழன் கிரகத்தில் ஆய்வு!! -இன்று புறப்பட்ட விண்கலம்-
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா வியாழன் சிறுகோள்களை ஆராய்ச்சி செய்யும் லூசி என்ற விண்கலத்தை இன்று சனிக்கிழமை விண்ணில் ஏவியது.
அந்த விண்கலம் 12 ஆண்டு பயணத்திட்டம் கொண்டதாகும். சூரிய மண்டலத்தின் உருவாக்கம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் வகையில் அட்லஸ் வி ராக்கெட் மூலம் இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளது.
சூரியனிலிருந்து வெகு தொலைவிற்கு பயணிக்கும் சூரிய சக்தியால் இயங்கும் முதல் விண்கலம் லூசி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.