மயக்க ஊசியால் சுட்ட வனத்துறை!! -காட்டிற்குள் தேடிப் பிடிப்பதற்குள் மயக்கம் தெளிந்து தப்பிய புலி-
இந்தியாவின் நீலகிரி மாவட்டம், கூடலூர், மசினகுடியில் 4 பேரை கொன்ற புலியை கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முதுமலை ஒம்பட்டா பகுதியில், புலியை தேடினர், மாலை வரை புலி இருப்பிடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. தேடுதல் பணியை மாலையில் முடித்து கொண்ட வனத்துறையினர், முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியை தொடர்ந்தனர்.
இந்நிலையில், இரவு 9:30 மணிக்கு தெப்பகாடு - மசினகுடி சாலையில் நடந்து, சென்ற புலிக்கு, கால்நடை மருத்துவ குழுவினார் மயக்க ஊசி செலுத்தனர்.
மயக்க நிலையில், வனப்பகுதிக்குள் சென்ற புலியை, வன ஊழியர்களை பின் தொடர்ந்து தேடினார். சுமார் அரை மணி நேர தேடுதலுக்கு பின், புலி முட்புதர் பகுதியில் இருப்பதை அறிந்து, அதனை பிடிக்க முயன்றனர். ஆனால், மயக்கம் தெளிந்த நிலையில் புலி, அவர்களிடம் சிக்காமல் தப்பியது.
தேடுதல் பணியை தொடர்ந்தனர். புலி கிடைக்கததால், ஏமாற்றம் அடைந்த வன ஊழியர்கள் நள்ளிரவு 1:30 மணிக்கு, ஏமாற்றத்துடன், வனத்திலிருந்து திரும்பினர்.
முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் அப்பகுதியில் மீண்டும் புலியை தேடும் பணியை வனத்துறையினர் ஆரம்பித்தனர்.