பாடசாலை வராததால் தாக்குதல்!! -மாணவனை எட்டி உதைத்த ஆசிரியர் கைது-

ஆசிரியர் - Editor II
பாடசாலை வராததால் தாக்குதல்!! -மாணவனை எட்டி உதைத்த ஆசிரியர் கைது-

இந்தியாவின் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதையடுத்து 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்புகளுக்கு சரியாக செல்லாமல் வெளியே சுற்றுவதாக முறைப்பாடு வந்தன.

இதைத்தொடர்ந்து மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணித்தனர். அப்போது அந்த பாடசாலையில் படிக்கும் சில மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியே சுற்றுவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாணவர்களை ஆசிரியர் சுப்பிரமணியன் (வயது 55) அழைத்து கண்டித்தார்.

மாணவர்களை அந்த ஆசிரியர் முட்டி போட வைத்தார். பிரம்பாலும் சரமாரியாக தாக்கியும், காலால் எட்டியும் உதைத்தார். இதனை வகுப்பில் இருந்த மாணவர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்தனர். அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியது. 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர். அவரை பணிநீக்கம் செய்யுமாறு மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு