SuperTopAds

யாழ்.சாவகச்சோி - மடத்தடி விபத்தில் 24 வயது இளைஞன் பலி..! வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவராம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி - மடத்தடி விபத்தில் 24 வயது இளைஞன் பலி..! வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவராம்..

யாழ்.சாவகச்சோியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இளைஞன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று இரவு சாவகச்சோி - மடத்தடி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் 

அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் அண்மையில் வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு திரும்பிய

சங்கத்தானையை சேர்ந்த நிரோஷ்(வயது24) என கூறப்படுகின்றது. விபத்தில் மோட்டார் சைக்கிள் சின்னாபின்னமாகியுள்ளது.