வடமாகாணத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமைகளை ஆராய இன்று யாழ்ப்பாணம் வருகிறார் பொலிஸ்மா அதிபர்! நாளை உயர்மட்ட கலந்துரையாடல்..
வடமாகாணத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக ஆராய்வதற்காக பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன இன்று யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதுடன், நாளைய தினம் உயர்மட்டக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம் வரும் பொலிஸ்மா அதிபர் தொண்டமனாறு செல்வசந்நிதி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடுகளை நடத்தவுள்ளதுடன் காங்கேசன்துறையில் தங்கியிருந்து நாளை கிளிநொச்சியில் நடைபெறவுள்ள உயர்மட்ட கலந்துரையாடலுக்கு செல்லவுள்ளார்.
நாளைய கூட்டத்துக்காக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், மூத்த பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
வடமாகாணத்தில் சட்டம் ஒழுங்கு நிலமைகள், பொலிஸ் துறையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன நாளை நடைபெறவுள்ள உயர்மட்டக் கலந்துரையாடலில் ஆராயவுள்ளார்.