மாமனாரின் கையை வெட்டி ஆற்றில் எறிந்த மருமகனான பூசகர் நஞ்சருந்திய நிலையில் மீட்பு, நடந்தது என்ன?
காணி பிணக்கினால் மாமனின் கையை வெட்டி விழுத்திய மருமகனான பூசகர் நஞ்சருந்திய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கிளிநொச்சி - கண்டாவளை பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காணி பிணக்கு காரணமாக மாமன் - மருமகன் இடையில் தகராறு இருந்து வந்ததாகவும் அது முற்றிய நிலையில் மாமனின் கையை வெட்டிய மருமகன்
துண்டாடப்பட்ட கையை ஆற்றில் வீசியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சம்பவத்தில் கையை இழந்த 61 வயதான கருணாமூர்த்தி என்பவர் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
இதேவேளை மருமகன் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.