SuperTopAds

அணுசக்தி தந்தை அப்துல் காதர் கான் மறைந்தார்!!

ஆசிரியர் - Editor II
அணுசக்தி தந்தை அப்துல் காதர் கான் மறைந்தார்!!

பாகிஸ்தான் நாட்டின் அணு ஆயுதத் திட்டத்தின் தந்தை என்று கருதப்படும் அப்துல் காதர் கான், தனது 85 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 

உலகின் முதல் இஸ்லாமிய அணு ஆயுத சக்தியாக பாகிஸ்தானை மாற்றியமைத்ததற்காகவும், போட்டி மற்றும் சக அணு ஆயுத நாடான இந்தியாவுக்கு எதிரான தனது செல்வாக்கை வலுப்படுத்தியதற்காகவும் அவர் ஒரு தேசிய ஹீரோ என்று பாராட்டப்பட்டார்.

ஆனால் பின்னர் ஈரான், வட கொரியா மற்றும் லிபியாவுக்கு தொழில்நுட்பத்தை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். தனது வாழ்வின் இறுதி வருடங்களை பலத்த பாதுகாப்புடன் கழித்த அணு விஞ்ஞானி, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உயிரிழந்துள்ளார். 

அப்துல் காதர் கானின் வேண்டுகோளின் பேரில் அவர் இஸ்லாமாபாத்தின் பைசல் மசூதியில் அடக்கம் செய்யப்படுவார் என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.