பிரித்தானியாவில் பரவும் புதுவித காய்ச்சல்!! -60 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கும் அபாயம்-
பிரித்தானியாவில் குளிர்காலத்தில் பரவும் ஒருவித காய்ச்சலால் 60 ஆயிரம் பேர் வரை மரணிக்க நேரிடும் என துணை தலைமை வைத்திய அதிகாரி ஜொனாதன் வான்-டாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அங்கு குளிர்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் புளு காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மக்களுக்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி கிடைக்காமையே இதற்கான காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால், இந்த குளிர்காலத்தில் 60,000 பேர் வரை காய்ச்சலால் உயிரிழக்க நேரிடும் என்று பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.