யாழ்.இணுவிலில் கோடரியை காட்டி கொள்ளை! 13 பவுண் நகைகளுடன் ஒருவர் பொலிஸாரிடம் சரண், மேலும் 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.இணுவிலில் கோடரியை காட்டி கொள்ளை! 13 பவுண் நகைகளுடன் ஒருவர் பொலிஸாரிடம் சரண், மேலும் 3 பேர் கைது..

யாழ்.இணுவில் பகுதியில் நள்ளிரவு வீடு புகுந்து கோடாரியை காட்டி அச்சுறுத்தியதுடன் சுமார் 21 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவத்தில் 3 பேர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொள்ளையடிக்கப்பட்ட 13 பவுண் நகையுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் சட்டத்தரணி ஒருவர் ஊடாக சரணடைந்த நிலையில் மேலும் 3 பேர் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் மற்றும் கொள்ளைக்கு உதவியவர் என 4 பேர் தற்போது பொலிஸாரின் விசாரணையின் கீழ் உள்ளனர். கடந்த 3ம் திகதி இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நள்ளிரவில் 

3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீடு புகுந்தள்ளதுடன் வீட்டிலிருந்தவர்களை கோடாரியை காண்பித்து அச்சுறுத்திவிட்டு சுமார் 21 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருந்தது. 

இதனடிப்படையில் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 

ஒருவர் தனது சட்டத்தரணி ஊடாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். அவர் 13 தங்கப் பவுண் நகைகளை பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தார். இந்நிலையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சம்பவத்துடன் தொடர்புடைய 

மேலும் இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் இருவரிடமிருந்தும் 2கைக்கோடாரிகள் மற்றும் 6 பவுண் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.சந்தேக நபர்கள் மூவருக்கு உதவியளித்து கொள்ளைச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த 

ஒருவரும் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு