யாழ்.ஏழாலையில் வாள்வெட்டு குழு ரவுடியை தப்பி ஓடவிட்ட பொலிஸார்! மனித உரிமை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஏழாலையில் வாள்வெட்டு குழு ரவுடியை தப்பி ஓடவிட்ட பொலிஸார்! மனித உரிமை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு..

யாழ்.ஏழாலை பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தவந்த ரவுடியை பொதுமக்கள் பிடித்துக் கொடுத்தபோதும் பொலிஸார் தப்பி ஓடவிட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றனர். 

இந்நிலையில் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய பொறுப்பதிகாரி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை அழைப்பாணை விடுத்திருக்கின்றது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வட மாகாண பொறுப்பதிகாரி தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் 8 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, பொலிஸ் அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 

வட மாகாண பொறுப்பதிகாரி தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார்.ஏழாலையில் கடந்த 04 ஆம் திகதி இரவு வீடொன்றினுள் புகுந்த சிலர் அங்கிருந்தவர்களை தாக்கினர். தாக்குதல் மேற்கொண்டவர்களை சிலர் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

எனினும், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு