பெருச்சாளிகளிடமிருந்து பறித்து விவசாயிகளிடம் கொடுக்கப்பட்ட 150 ஏக்கர் விவசாய நிலம்..! அமைச்சர் டக்ளஸால் நடந்த காரியம்..
கிளிநொச்சி - ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட காணி மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்காக பிரதேச செயலகத்தினால் பகிர்ந்து வழங்கப்பட்டிருக்கின்றது.
கரும்புத்தோட்டத்திற்கு சொந்தமான குறித்த காணியை 2018ம் ஆண்டில் சிலர் கையகப்படுத்த முயற்சித்திருந்தனர். அதற்கு வடமாகாண முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனும்
அனுமதி கொடுத்திருந்த விடயம் அப்போது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. இதனைத் தொடர்ந்தும் குறித்த காணியை உயர் பதவிகளில் உள்ள சிலர்
கையகப்படுத்தியிருந்தனர். ஸ்கந்தபுரம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த நுாற்றுக் கணக்கான விவசாயிகள் நிலம் இல்லாமல் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கு குத்தகைக்கு வழங்கும்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதும் அத்தனையும் உதாசீனம் செய்யப்பட்டு பெருச்சாளிகளிடம் காணி சிக்கியிருந்தது.
இந்நிலையில் பொதுமக்களின் முயற்சியினால் கரும்புத்தோட்ட காணி காணி பயன்பாட்டு குழுவிடம் கையளிக்கப்பட்டதுடன்,
காணியை தமது விவசாய நடவடிக்கைகளுக்காக மட்டும் வழங்குமாறு அமைச்சரிடம் மக்கள் கோரியிருந்ததன் அடிப்படையில் அமைச்சரின் துரித நடவடிக்கையால்,
நேற்றய தினம் மக்கள் விவசாயம் செய்வதற்காக சுமார் 196 பயனாளிகளுக்கு 12 கிராமமட்ட அமைப்புக்களால் தேர்வு செய்யப்பட்டு கிராமசேவகரால் அங்கீகரிக்கப்பட்டு
காணிகள் வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் கருத்து தொிவித்த கிராம மட்ட அமைப்பு பிரதிநிதி சாம் 2018ம் ஆண்டு குறித்த காணியை ஒரு சிலர்
ஆக்கிரமிப்பு செய்வதற்கு முயற்சித்தனர். அதற்கு அப்போதைய முதலமைச்சர் உடந்தையாக இருந்தார். நாங்கள் காணியில் விவசாயம் செய்ய முயற்சித்தபோது
பொலிஸாரை பயன்படுத்தி விரட்டியடித்தார்கள் என கூறினார்.