பூநகரி - கௌதாரிமுனை கிராம மக்களுக்கு 100 ஏக்கர் நெற்செய்கை காணி பகிர்ந்தளிக்கப்பட்டது!
பூநகரி - கௌதாரிமுனையில் குலுக்கல் முறையில் தொிவு செய்யப்பட்ட வயல் காணியற்ற மக்களுக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் 100 ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கௌதாரிமுனை கிராமத்தில் காணியற்ற மக்களுக்காக இந்த காணி வழங்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேச செயலக காணி உத்தியோகஸ்த்தர்களினால் இன்றைய தினம் காணிகள் அளந்து பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இடம்பெற்றிருக்கின்றது.
அண்மையில் கௌதாரிமுனை கிராமத்திற்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமக்கான வயல் காணிகளை பெற்றுத்தருமான காணியற்ற மக்கள் கேட்டிருந்தனர்.
இதற்கமைக குறித்த காணிகளை நெற்செய்கைக்கு ஏற்ற வகையில் தயார்ப்படுத்தும் வகையில், 2.7 மில்லியன் ரூபா செலவில் காணியை உழுது, பண்படுத்தி,
வரம்பு கட்டும் பணிகளை, கிளிநொச்சி-முல்லைத்தீவு மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள ஆணையாளர் தேவரதன் மேற்கொண்டிருந்தார்.