SuperTopAds

லடாக் எல்லையில் மீண்டும் படைகளை குவிக்கும் சீனா!! -கடும் எதிர்ப்பு வெளியிடும் இந்தியா-

ஆசிரியர் - Editor II
லடாக் எல்லையில் மீண்டும் படைகளை குவிக்கும் சீனா!! -கடும் எதிர்ப்பு வெளியிடும் இந்தியா-

லடாக் எல்லை பகுதியில் சீனா மீண்டும் படைகளை குவித்து வருகிறது. இது குறித்து இந்திய தரப்பில் இருந்து சீனாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து இந்தியா வெளியிட்ட தகவலில், கிழக்கு லடாக் பகுதியில் சீனா ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய நிலையை மாற்ற ஒருதலைபட்சமாக முயற்சி மேற்கொள்கிறது. இதனால் எல்லை பகுதியில் அமைதி மீறல் ஏற்பட்டுள்ளது.

சீனா ராணுவம் எல்லை பகுதியில் தொடர்ந்து ராணுவ உபகரணங்களை நிறுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவும் எதிர்வரிசையில் ஆயுதப்படைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாசி கூறும்போது, “கிழக்கு லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் நிலவும் மீதம் உள்ள பிரச்சினைகளை தீர்க்க சீனா விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்புகிறோம். இரு தரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் பதற்றங்களை தணிக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.