SuperTopAds

பெற்ற குழந்தையை கைவிட்டு தோழியுடன் குடும்பம் நடத்தும் பெண்!!

ஆசிரியர் - Editor II
பெற்ற குழந்தையை கைவிட்டு தோழியுடன் குடும்பம் நடத்தும் பெண்!!

இந்தியாவின் மதுரை - பனங்காடியை சேர்ந்தவர் சரவணன் என்பவர் 24 வயதான ஜெயஸ்ரீ என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

2019 ஆம் ஆண்டில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின் சில மாதங்களிலேயே ஜெயஸ்ரீ வீட்டில் இருந்து மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அலங்காநல்லூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

இந்தநிலையில் தன்னுடைய மனைவியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த பொலிஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை மேல் நீதிமன்றத்தில் சரவணன் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் ஜெயஸ்ரீ எங்கு இருக்கிறார் என பொலிஸார் தேடி வந்தனர். இந்தநிலையில் சமீபத்தில் அவர் சென்னையில் ஒரு ஹோட்டலில் இருந்ததை பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

பின்னர் அவரை பிடித்து விசாரித்தனர். இதன் போது மதுரையில் உள்ள தனியார் பாடசாலையில் படிக்கும் போதே ஜெயஸ்ரீ தனது தோழி துர்பாதேவியுடன் காதலன்-காதலியை போல இருந்துள்ளனர். பாடசாலை முடிந்த பின்பும் அவர்களின் பழக்கம் தொடர்ந்தது. 

இந்த விடயம் ஜெயஸ்ரீயின் குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்தனர். ஆனால் திருமணத்திற்கு பின்பும் அவர் துர்காதேவியை மறக்க முடியாமல் தவித்தார்.

கர்ப்பிணியாக இருந்ததால் அவரால் அப்போது தோழியை தேடி செல்ல முடியவில்லை. குழந்தை பிறந்த உடன், சில மாதங்களிலேயே குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு துர்காவை பார்க்க சென்னைக்கு சென்றுவிட்டார். 

பின்னர் தோழி துர்கா தேவிக்காக சிகை அலங்காரத்தையும், உடையையும் ஆண் போல் மாற்றியுள்ளார். அங்கு அவர்கள் ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்துள்ளனர் என்று பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.