யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு வன்செயல்கள்..! பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து சிறப்பு நடவடிக்கை, ஆளுநர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு வன்செயல்கள்..! பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து சிறப்பு நடவடிக்கை, ஆளுநர் அறிவிப்பு..

வடமாகாணத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் கவலையளிப்பதாக கூறியிருக்கும் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், இவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும். எனவும் கோரியுள்ளார். 

நேற்றய தினம் மெய்நிகர் வழியாக ஊடக சந்திப்பை நடாத்திய வடமாகாண ஆளுநரிடம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வன்செயல்கள் தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் தமக்கு ஏதேனும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில் எச்சம் ஏற்பட்டால் எனது இணைப்புச் செயலாளர் மற்றும் பிரத்தியோக செயலாளரை தொடர்பு கொள்ள முடியும். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சமூக விரோத செயற்பாடுகள் 

தொடர்பில் நான் கவலை அடைகிறேன். இத்தகைய செயற்பாடுகளை கட்டுப்படுத்த நோக்கில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அண்மைய நாட்களில் இடம்பெறும் கைதுகள் அதன் பின்னணியிலேயே, 

மேலும் சமூகத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். இவ்வாறான நிலைமைகளில் பொதுமக்கள் தமது பிரச்சினைகளை தெரிவிப்பதற்காக 

எனது இணைப்புச் செயலாளரது தொலைபேசி இலக்கமான 0777229338, அல்லது பிரத்தியக செயலாளர் இலக்கமான 0768095139 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு