SuperTopAds

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக விசர்நாய் தடுப்பூசி!! -வைத்தியர், தாதியர் பணி இடைநீக்கம்-

ஆசிரியர் - Editor II
கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக விசர்நாய் தடுப்பூசி!! -வைத்தியர், தாதியர் பணி இடைநீக்கம்-

இந்தியாவின் தானே அருகே கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபீஸ் ஊசி செலுத்திய வைத்தியர் மற்றும் தாதியர் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது.

மராட்டிய மாநிலம் தானே அருகே கல்வா அட்கோன்னேஷ்வர் நகர் பகுதியில் ராஜ்குமார் யாதவ் என்பவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அங்குள்ள ஒரு சுகாதார நிலையத்திற்கு சென்றார். 

அங்கு பணியில் இருந்த வைத்தியர் ராக்கி தாவ்டே மற்றும் தாதியர் கீர்த்தி ராயத் ஆகியோர் அவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

பின்னர் ஊசி மருந்து பாட்டிலை கவனித்தபோது, அது கொரோனாவிற்கான தடுப்பூசி இல்லை என்பதும், ரேபீஸ் வெறிநாய்கடிக்காக செலுத்தப்படும் ஊசி மருந்து என்பதும் தெரியவந்தது.

இது குறித்து ராஜ்குமார் தானே மாநகராட்சியில் முறைப்பாடு செய்தார். அந்த புகாரின் படி சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இதற்கு காரணமாக இருந்த வைத்தியர் மற்றும் தாதியர் ஆகிய 2 பேரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்தனர்.