SuperTopAds

கொரோனாவால் உயிரிழந்த காதல் மனைவி!! -கோவில் கட்டி வழிபடும் கணவர்-

ஆசிரியர் - Editor II
கொரோனாவால் உயிரிழந்த காதல் மனைவி!! -கோவில் கட்டி வழிபடும் கணவர்-

இந்தியாவின் ஷாஜபூர் - சம்ப்கேடா கிராமத்தை சேர்ந்த நாராயண் சிங் ரத்தோர் என்பவர் கொரோனாவால் உயிரிழந்த காதல் மனைவிக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வருகிறார்.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த நாராயண் சிங் ரத்தோர். இவரது மனைவி கீதாபாய். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருடைய மனைவி இறந்துள்ளார். 

தனது மனைவி நினைவாக இருந்த நாராயண் சிங் ரத்தோர் ஒரு கோவிலை கட்ட முடிவு செய்தார். அதன்படி காதல் மனைவிக்கு அவரது சொந்த இடத்தில் கோவிலை கட்டினார். மேலும் அதில் தனது மனைவியின் சிலையை நிறுவினார். அதனை தினந்தோறும் வழிபாடு செய்து வருகிறார்.