ஆயுதங்களுடன் வீடு புகுந்த கும்பலினால் முன்னாள் போராளி கடத்தப்பட்டார்! உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
ஆயுதங்களுடன் வீடு புகுந்த கும்பலினால் முன்னாள் போராளி கடத்தப்பட்டார்! உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு..

திருகொணமலை - வரோதய நகரில் 39 வயதான நபர் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்த கும்பலினால் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார். 

இன்று அதிகாலை இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

ஆயுதங்களுடன் வாகனத்தில் வந்த சிலர் தாம் உப்புவெளி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு குறித்த நபரை அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் விசாரிக்க சென்றபோது குறித்த நடவடிக்கையை தாம் முன்னெடுக்கவில்லை என 

பொலிஸ் நிலைய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த விடயம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவின் அவரது மனைவி 

மற்றும் தாயார் முறைப்பாடு செய்துள்ளனர். இவ்வாறு கடத்தப்பட்டவர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையாகி பல வருடங்களாக 

சிறு கைத்தொழிலை மேற்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாத நிலையில் 

அவரை தேடிக் கண்டுபிடிப்பதற்கு உதவி வழங்குமாறு மனைவி மற்றும் தாயார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு