SuperTopAds

சட்டத்தரணி போல் வந்தவர்களால் நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு!! -மூவர் பலி-

ஆசிரியர் - Editor II
சட்டத்தரணி போல் வந்தவர்களால் நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு!! -மூவர் பலி-

இந்தியாவின் வட டெல்லி நீதிமன்றம் ஒன்றில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், மேற்படிச் சம்பவத்தில் மேலும் பலர் படு காயமடைந்துள்ளனர்.

கைதி ஒருவரை விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்றபோது, சட்டத்தரணிகளை போல உடைதரித்த இருவர் திடீரென துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர். 

கைதிக்கு காவலாக வந்திருந்த காவல்துறையினர் பதில் தாக்குதலை மேற்கொண்டு இரண்டு துப்பாக்கிதாரிகளையும் சுட்டு கொன்றனர்.

பல குற்றச்செயல்களுடன் தொடர்பு கொண்ட ஜிற்ரெண்டர் கோகி என்ற கைதி சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளதாக மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.