SuperTopAds

இன்றைக்கு ஆர்சிபி வீரர்கள் பச்சைநிற ஜெர்சி அணிந்து விளையாடுவது ஏன்று என்று தெரியுமா?

ஆசிரியர் - Admin
இன்றைக்கு ஆர்சிபி வீரர்கள் பச்சைநிற ஜெர்சி அணிந்து விளையாடுவது ஏன்று என்று தெரியுமா?

ஐபிஎல் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. இன்றைய முதல் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடி வருகிறார்கள். வழக்கமாக சிகப்பு நிற ஜெர்சி அணிந்து விளயைாடும் ஆர்சிபி வீரர்கள் இன்று ஏன் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடுகிறார்கள் என்று சந்தேகம் ரசிகர்களுக்கு வரலாம்.

2011-ல் இருந்து ஆர்சிபி அணி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இப்படி ஒரு போட்டியில் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடுவது வழக்கமாக கொண்டுள்ளது.

2011-ல் இருந்து ‘Go Green’ முயற்சியை மேற்கொண்டு வருகிறது. புவி வெப்பமாயதலை தடுக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொள்கிறது. ஆர்சிபி அணி மரம் வளர்த்தல், ரசிகர்கள் போட்டியை காண காரில் வராமல் பஸ்களில் வந்து எரிபொருளை சேமிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

2016-ல் ஆர்சிபி வீரர்கள் சைக்கிளில் அழைத்து வரப்பட்டனர். ரசிகர்கள் மைதானத்திற்கு வருவதற்கு ரிக்சாவும் ஏற்பாடு செய்திருந்தது. ரசிகர்களுக்கு மரக்கன்று பரிசாக வழங்குவதுடன் சுற்றுச்சூழ்ல் பாதுகாப்பு விழிப்புணர்வையும் எடுத்துரைக்கிறது.