SuperTopAds

தலிபான்கள் ஆட்சி அமைப்பதில் இழுபறி!! -உள்நாட்டு யுத்தம் மூளும் என இம்ரான் எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor II
தலிபான்கள் ஆட்சி அமைப்பதில் இழுபறி!! -உள்நாட்டு யுத்தம் மூளும் என இம்ரான் எச்சரிக்கை-

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி அமைவதில் இழுபறி தொடர்கின்ற நிலையில், அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை தலிபான்கள் கொடுக்காவிட்டால், அங்கு உள்நாட்டுப் யுத்தம் ஏற்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

அவர் ஆப்கன் நிலைமை பற்றி, பிரிட்டன் ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

பயங்கரவாத அமைப்புகள், ஆப்கன் மண்ணை, பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு எதிராகப் பயன்படுத்தாமல் தடுக்க வேண்டும்.

தலிபான்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை தர வேண்டும். இல்லாவிடில், உள்நாட்டுப் போர் மூள்வதைத் தடுக்க முடியாது. அப்படியேதும் நடந்தால், ஆப்கன் பயங்கரவாதிகளுக்கு உகந்த இடமாக மாறிவிடும். அது, ஆப்கனுக்கு மட்டுமின்றி, பாகிஸ்தானின் பாதுகாப்புக்கும் ஆபத்து என்றார். 

இம்ரான் ஏற்கனவே இதே போன்றதொரு யோசனையை தெரிவித்திருந்தார். அதற்கு தலிபான்கள், 'எங்களுடைய ஆட்சி எப்படி அமைய வேண்டும் என பாகிஸ்தான் சொல்லத் தேவைஇல்லை. 'எங்களை பாகிஸ்தான் உட்பட, வேறு எந்த நாடும் வழிநடத்த முடியாது' என பதிலடி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.