கிளிநொச்சியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கொரோனாவுக்கு பலி!
கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கர்ப்பவதி ஒருவர் நிமோனியா காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது கர்ப்பிணி எனவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.