கட்டாய தடுப்பூசி சான்றிதழுக்கு எதிர்ப்பு!! -பிரான்சில் மக்கள் போராட்டம்-

ஆசிரியர் - Editor II
கட்டாய தடுப்பூசி சான்றிதழுக்கு எதிர்ப்பு!! -பிரான்சில் மக்கள் போராட்டம்-

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் அரசின் கட்டாய தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந் நாட்டில் பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, அங்கு பொது இடங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட சான்றிதழை பொதுமக்கள் கொண்டு வர வேண்டும் என்று அரசாங்கம் கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. 

அரசின் இந்த முடிவு அந்நாட்டு மக்களிடையே பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நாட்டின் பல பகுதிகளில் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. 

இதனை தொடர்ந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நூற்றுக்கணக்கானோர் இணைந்து கட்டாய தடுப்பூசி சான்றிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். புகழ்பெற்ற ஈபில் கோபுரத்திற்கு முன்பாக கூடிய மக்கள், கண்டன கோஷங்களை எழுப்பினர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு