SuperTopAds

பெண்களின் கல்விக்கு தாலிபான்கள் முழுத் தடை!!

ஆசிரியர் - Editor II
பெண்களின் கல்விக்கு தாலிபான்கள் முழுத் தடை!!

ஆப்கானில் நேற்று முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மேல்நிலை பாடசாலைகளில் பெண்கள் கல்வி கற்பதற்கு தாலிபான்கள் முழுத் தடை விதித்துள்ளனர்.

கற்பித்தல் நடவடிக்கைகளிலும் பெண் ஆசிரியர்கள் ஈடுபட முடியாது எனவும் தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த செயற்பாடு காரணமாக மாணவிகளின் கல்வி முற்றாக ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னதாக 1990 ஆம் ஆண்டு ஆட்சிபுரிந்த தாலிபான்கள் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாரிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் விவகார அமைச்சினை மூடியுள்ள தாலிபான்கள், அதற்கு பதிலாக முஸ்லீம் சட்டங்களை அமுல்படுத்தும் திணைக்களமாக அதனை மாற்றியுள்ளனர்.