வங்குரோத்து அரசியல்வாதிகளின் செயற்பாட்டினால் தவறான அறிக்கைகள் வெளியாகின்றன
வங்குரோத்து அரசியல்வாதிகளின் செயற்பாட்டினால் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து தவறான அறிக்கைகள் வெளியாகின்றன என அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தொடர்பில் வெளிவந்த செய்தி விமர்சனத்திற்கு பதிலளிக்கையில் இன்று(17) இரவு அம்பாறை நகர தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
மேலும் தமது கருத்தில் தெரிவித்ததாவது
இலங்கையை ஒரு முழுமையான விவசாய நாடாக மாற்றுவதற்கான எமது ஆதரவினை தெரிவிக்கின்றோம்.எனினும் சில வங்குரோத்து அரசியல் வாதிகள் மக்களை பிழையாக வழிநடாத்தி எம்மையும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி திட்டங்களையும் குழப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தொடர்பான செய்தி ஒன்று வெளியாகி இருந்தது.இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். எமது இராஜாங்க அமைச்சர் விவசாய நடவடிக்கையை பார்வையிட்ட போது மக்கள் சிலர் இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததாக வதந்திகளை பரப்புகின்றனர்.இந்த விடயத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் உண்மைக்கு புறம்பான விடயம் என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம்.சில கட்சிகள் தங்களது வங்குரோத்து நிலையினை இந்த விடயத்தில் இந்த முடிவு எமது தனிப்பட்ட முடிவு.சிலர் சொல்வது போன்று அரசியல் நிகழ்ச்சி நிரலை இவ்வாறான விடயத்தில் முன்னெடுக்கின்றனர்.
சில ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இந்த விடயங்கள் உண்மைக்குபுறம்பாக வெளிவந்துள்ள.இது உண்மைக்கு புறம்பானதாகும்.எனவே விடயத்தினை முன்னெடுத்த வங்குரோத்து கட்சிகளின் செயற்பாட்டினை கண்டிக்கின்றோம் என்றனர்.
இச்செய்தியாளர் சந்திப்பில் அம்பாறை நகர சபை பிதா ஹலும் குமார பெணான்டோ உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.