நீண்டதூரம் சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் ஏவுகணை!! -வெற்றிகரமாக பரிசோதித்தது வடகொரியா-

ஆசிரியர் - Editor II
நீண்டதூரம் சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் ஏவுகணை!! -வெற்றிகரமாக பரிசோதித்தது வடகொரியா-

வட கொரியா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் பரிசோதித்த குறித்த ஏவுகணைகள் சுமார் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளைச் சரியாகத் தாக்கியதாகத் தெரிவித்துள்ளது. மேலும் ஏவுகணைகளின் வளர்ச்சி நாட்டின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாகவும் கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தங்கள் நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஏவுகணை பரிசோதனை தொடர்பில் வழமை போன்று அமெரிக்கா தனது அதிர்ப்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு