பெண்களின் கல்விக்கு தலிப்பான்கள் விதித்த புதிய கட்டுப்பாடுகள்!!

ஆசிரியர் - Editor II
பெண்களின் கல்விக்கு தலிப்பான்கள் விதித்த புதிய கட்டுப்பாடுகள்!!

ஆப்கானில் பெண்கள் கல்விக்கான புதிய விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பில் தலிபானின் கல்வி அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி அங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து அறிவித்துள்ளார். 

பெண்கள் முதுகலை பட்டப்படிப்பு உட்பட பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து படிக்கலாம், ஆனால் வகுப்பறைகள் பாலினமாக பிரிக்கப்பட்டு தலையினை மறைக்கும் வகையிலான ஹிஜாப்கள் கட்டாயமாக்கப்படும். பெண் மாணவர்களுக்கு பெண் ஆசிரியர்களினால் கற்பிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் அறிவித்துள்ளார். 

கடந்த 1996 மற்றும் 2001 க்கு இடையில் தலிபான் ஆட்சியின் கீழ் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு