SuperTopAds

கொரோனா கட்டுப்பாட்டு உபகரணங்கள் யுனிசெப் அமைப்பினால் வழங்கி வைப்பு

ஆசிரியர் - Editor III
கொரோனா கட்டுப்பாட்டு உபகரணங்கள் யுனிசெப் அமைப்பினால் வழங்கி வைப்பு

கொரோனா  அலையை கட்டுப்படுத்தும் நோக்கில்  யுனிசெப் நிறுவனத்தினால் முன்களப் பணியாளர்களாக கடமையாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தேவையான ஒரு தொகை பாதுகாப்பு உபகரணங்கள் இன்று (10) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. 

கிழக்கு மாகாணத்தில் பரவலாக அதிகரித்துவரும் நிலையில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக்கினால் குறித்த உபகரணங்கள்  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணனிடம் வழங்கி வைக்கப்பட்டன.அத்துடன் முகக்கவசம், முகத்திரை, பி.பி.ஈ. பாதுகாப்பு அங்கிகள், தொற்றுநீக்கி (சனிடைசர்), உட்பட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை கொண்ட பொதிகளை சுகாதார வைத்திய அதிகாரிகளிடம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணன் இதன்போது வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பி.எம். அப்துல் வாஜித்,

கல்முனை பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம். சி .மாஹிர் உட்பட சுகாதார வைத்திய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த உபகரணங்களை    கல்முனை பிராந்திய பணிமனைக்குட்பட்ட  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினருக்கு  வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.