அழகிய சப்பறத்தில் எழுந்தருளிய மருதடி விநாயகர்

ஆசிரியர் - Admin
அழகிய சப்பறத்தில் எழுந்தருளிய மருதடி விநாயகர்

பிரசித்தி பெற்ற மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் சப்பறத் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை(13) பிற்பகல் சிறப்பாக இடம்பெற்றது.

பிற்பகல்-06 மணிக்கு வசந்தமண்டபப் பூசை இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், சிவன்-அம்பாள், வள்ளி, தெய்வயானை சமேத முருகப் பெருமான் ஆகிய முத்தெய்வங்களும் உள்வீதியில் வலம் வந்தனர். அதனைத் தொடர்ந்து இரவு-07 மணியளவில் முத்தெய்வங்களும் சப்பறத்தில் எழுந்தருளினர்.

அதனைத் தொடர்ந்து மின்னொளி மிளிரும் அழகிய சப்பறத்தில் முத்தெய்வங்களும் மங்கள தவில், நாதஸ்வர முழக்கங்கள் முழங்க வீதி வலம் வந்து அருள்பாலித்தனர்.

இதேவேளை, சித்திரைப் புத்தாண்டு தினமான நாளைய தினம்(14) முற்பகல்-11 மணியளவில் தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளதுடன் தேர்ததிருவிழா காண பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் அணிதிரள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு