டெல்டா பரவல்- கல்முனை சுகாதார பிராந்திய மாதிரிகளில் 95 வீதம் அடையாளம் – பிராந்திய பணிப்பாளர் டாக்டர் சுகுணன்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட PCR மாதிரிகளில் 95 வீதம் டெல்டா தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.எனவே மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்கடர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
கடந்த 04.09.2021 அன்று கல்முனை சுகாதார சேவைகள் பிராந்தியத்தில் இருந்து பெறப்பட்ட PCR மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு இரசாயண பகுப்பாய்வு பிரிவுக்கு அனுப்பப்பட்டன. அங்கு பரிசோதனை செய்யப்பட்ட 18 மாதிரிகளில் 17 கொவிட் டெல்டா வைரஸ் தொற்றும் ஒரு கொவிட் அல்பா வைரஸ் தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த வைரஸ் வேகமாக பரவக் கூடியதும் மிகவும் அச்சறுத்தலானதுமாகும் .எனவே மக்கள் நிலைமையினை கருத்தில் கொண்டு மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும், தடுப்பூசிகளை தவறாது பெற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்தார்.