தெல்லிப்பழை துர்க்காதேவி விளம்பி வருடப்பிறப்பு விழா

ஆசிரியர் - Admin
தெல்லிப்பழை துர்க்காதேவி விளம்பி வருடப்பிறப்பு விழா

யாழ். தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத்தின் விளம்பி வருடப்பிறப்பு விழா நாளை சனிக்கிழமை (14) சிறப்பாக இடம்பெறவுள்ளதாக தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி- ஆறு. திருமுருகன் தெரிவித்துள்ளார்.

நாளை அதிகாலை-03.30 மணிக்குத் திருப்பள்ளி எழுச்சியுடன் திருக்கதவு திறக்கப்படும். அதனைத் தொடர்ந்து அதிகாலை-04.30 மணிக்கு காலைச்சந்திப் பூசை, அதிகாலை-05 மணிக்கு வசந்தமண்டபப் பூசை என்பன இடம்பெறும்.

வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து அம்பாள் ஆலய முன்றலில் அமைந்துள்ள துர்க்காபுஷ்கரணி தீர்த்தக் கேணியை நோக்கி எழுந்தருள்வார். அங்கு புதுவருடப் பிறப்பையொட்டிய சங்கிராந்தித் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து புனித தீர்த்தம் எடுத்துவரப்பட்டு ஆலய மூலஸ்தானத்தில் 108 கலச அபிஷேகம் இடம்பெறும்.

காலை-08.13 மணிக்கு வருடப்பிறப்பு விசேட பூசையும் கைவிசேடம் வழங்கலும் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து முற்பகல்-11 மணிக்கு அம்பாள் வீதியுலா வருகை தந்து அருள்பாலிப்பார். தொடர்ந்து மதியம் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கல் நடைபெறும்.

தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத்தின் விளம்பி வருடப்பிறப்பு விழா விசேட பூசை வழிபாட்டில் அடியார்கள் அனைவரும் ஆசார சீலர்களாக வருகை தந்து அம்பாளின் திருவருளைப் பெற்றுய்யுமாறு செஞ்சொற்செல்வர் கலாநிதி- ஆறு. திருமுருகன் மேலும் கேட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு