SuperTopAds

கல்முனை மாநகர நீரோடும் வடிகான்களில் தேங்கியுள்ள மண் குப்பைகள் அகற்றும் செயற்திட்டம்

ஆசிரியர் - Editor III
கல்முனை மாநகர நீரோடும் வடிகான்களில் தேங்கியுள்ள மண் குப்பைகள் அகற்றும் செயற்திட்டம்

கொரோனா அனர்த்த நிலைமையினை அடுத்து நாட்டில் தற்போது  அறிவிக்கப்பட்டுள்ள  பொதுமுடக்கத்திலும்  கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட   நீரோடும் வடிகான்களில் தேங்கியுள்ள மண் குப்பைகள் அகற்றும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தினமும் பகலும் இரவு வேளையிலும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபையின் வேலைப்பிரிவு சுகாதார பிரிவு மற்றும் திண்மக்கழிவகற்றும் பிரிவு என்பன துரிதமாக செயற்பட்டு வருகின்றன.

கனரக வாகனத்தின் உதவியுடனும் வடிகான்களில் நீண்ட காலமாக தேங்கி காணப்பட்ட கழிவுகள் விரைவாக அகற்றப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் பருவகாலம் ஆரம்பமாக உள்ளமையினால் மழை நீர் வடிந்தோடி கடல் ஆறுகளை அடைவதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு வடிகான்களில் இருந்து அகற்றப்படும் மண்உள்ளிட்ட திண்மக்கழிவுகள் மாநகர பகுதிகளில்  சீரற்றுள்ள பாதைகளை செப்பனிடுவதற்காக  கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தலும் மாநகர சபை ஊழியர்கள் இச்செயற்பாட்டினை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அறிவுறுத்தலுக்கமைய   மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சாரின் வழிகாட்டலில் மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்  அர்சாத் காரியப்பர் நெறிப்படுத்தலில்   இப்பணிகளை   தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இச்செயற்பாடு  கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான பொதுச் சந்தையை சூழவுள்ள  வடிகான்கள்  கல்முனை நற்பிட்டிமுனை மருதமுனை சாய்ந்தமருது உள்ளிட்டஅபகுதிகளில் உள்ள வடிகான்களில் தேங்கியுள்ள கழிவுகளும் விரைவாக துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.