200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் காலடித் தடம் கண்டுபிடிப்பு!!

ஆசிரியர் - Editor II
200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் காலடித் தடம் கண்டுபிடிப்பு!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பாலைவனப் பகுதியில் சுமார் 200 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய டைனோசரின் காலடித் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள தார் பாலைவனத்தில் பன்னெடுங்காலம் முன்பு மாபெரும் டைனோசர்கள் வாழ்ந்தது தெரியவந்துள்ளது. யூப்ரான்டெஸ் சிஎஃப். ஜிகாண்டியஸ், யூப்ரோன்டெஸ் க்ளென்ரோசென்சிஸ் மற்றும் கிரல்லேட்டர் டெனுஸ் ஆகிய மூன்று இனங்களைச் சேர்ந்த டைனோசர்களின் காலடித் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் யூப்ரோன்டெஸ் 12 முதல் 15 மீட்டர் நீளமும் 500 கிலோ முதல் 700 கிலோ எடையும் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த உயிரினங்களின் தடங்கள் 200 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு