2 ஆயிரம் ரூபாய் இடர்கால நிவாரணம் வழங்கல் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..
கிளிநொச்சி மாவட்டத்தில் அரசின் 2 ஆயிரம் ரூபாய் இடர்கால நிவாரணம் 2500 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
அரசாங்கத்தினால் கொரோனா இடர் காலத்தில் வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நாடு பூரா வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 8500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 2ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு குறித்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது.
மேலும் ஏனைய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் கிடைக்கப்பெற்றதும் அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.