தலிபான்களின் புதிய அரசுடன் இணைந்து செயற்பட தயார்!! -ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது-
ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களை ஆதரிப்பதற்காக அந்நாட்டில் அமையும் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட தயராக உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் போர்ரெல் தெரிவித்துள்ளார்.
ஆப்கானில் தலிபான்களால் அமைக்கும் அரசின் செயற்பாடுகளை பொறுத்து அவர்களுடனான தொடர்பு அதிகப்படுத்தப்படும். ஆப்கானின் புதிய அரசாங்கம் கண்டிப்பாக பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கக் கூடாது.
மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதோடு, சட்டம் ஒழுங்கு மற்றும் சுதந்திரமான ஊடகங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். பிற அரசியல் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் போர்ரெல் கோரிக்கை விடுத்துள்ளார்.