SuperTopAds

நியூசிலாந்தில் பொதுமக்கள்மீது கத்திக்குத்தை மேற்கொண்ட இலங்கையர் சுட்டுக்கொலை!

ஆசிரியர் - Admin
நியூசிலாந்தில் பொதுமக்கள்மீது கத்திக்குத்தை மேற்கொண்ட இலங்கையர் சுட்டுக்கொலை!

நியூசிலாந்து நாட்டின் Auckland நகரிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஆறு பேரைக் கத்தியால் குத்தி காயப்படுத்திய நபர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 

இதை செய்தவர் ISIS அமைப்பால் ஈர்க்கப்பட்ட ஒருவர் என்றும், நடந்தது ஒரு தீவிரவாத செயல் என்றும் நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern கூறினார்.

Auckland நகரின் தென்மேற்கு புறநகர்ப் பகுதியான New Lynn என்ற இடத்தில் உள்ள Countdown சூப்பர் மார்க்கெட்டில் இச்சம்பவம் இடம்பெற்ற நிலையில் அங்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை சுட்டுக் கொன்றனர்.

சம்பவத்தில் காயப்பட்ட மூன்று பேர் ஆபத்தான நிலையில் Auckland நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் மூன்று பேரில் ஒருவர் ஆபத்தான நிலையிலும் இரண்டு பேர் மிதமான நிலையிலும் வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern கூறினார்.

குற்றமிழைத்தவரைக் காவல்துறையினர் சில காலமாகக் கண்காணித்து வருவதால், சம்பவம் நடந்த ஒரு நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்குக் பொலிஸார் விரைந்து செல்ல முடிந்தது என்று காவல்துறை ஆணையர் Andrew Coster கூறினார்.

சுட்டுக்கொல்லப்பட்ட நபர் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் இலங்கையிலிருந்து நியூசிலாந்திற்கு 2011ஆம் ஆண்டு குடி வந்ததாகவும், 2016 ஆம் ஆண்டு முதல் அவர் பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும் நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern மேலும் கூறினார்.