8 மாத குழந்தைக்கு எய்ட்ஸ்!! -இரத்த தானம் பெற்றதால் பெரும் விபரீதம்-

ஆசிரியர் - Editor II
8 மாத குழந்தைக்கு எய்ட்ஸ்!! -இரத்த தானம் பெற்றதால் பெரும் விபரீதம்-

இந்தியாவின் மும்பையில் அகோலா மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கான வேறு ஒருவரின் இரத்தம் ஏற்றப்பட்ட 8 மாத குழந்தைக்கு எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் நடந்த விசாரணையில், அண்மையில் குறித்த குழந்தை இரத்த தானம் பெற்றதில் அந்த குழந்தைக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- 

குறித்த குழந்தையின் உடல்நிலை அண்மையில் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில் குழந்தைக்கு இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உள்ளூர் வைத்தியரின் அறிவுறுத்தலின் பேரில் அகோலாவில் உள்ள இரத்த வங்கியில் இருந்து அவளுக்கு இரத்தம் வழங்கப்பட்டது. இதனை குழந்தைக்கு செலுத்தியதும் அக் குழந்தை குணமடைந்தது. இருப்பினும் அந்த குழந்தை அடிக்கடி நோய்வாய்பட ஆரம்பித்தது. 

இதைதொடர்ந்து குழந்தையை அமராவதியில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். அங்கு நடத்திய பரிசோதனையில் அவளுக்கு எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதைதொடர்ந்து குழந்தைக்கு நோய் பாதிப்பு எவ்வாறு ஏற்பட்டது என கண்டறிய பெற்றோருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்களுக்கு நோய் பாதிப்பு இல்லை. எனவே இரத்தம் ஏற்றியதன் மூலம் குழந்தைக்கு எச்.ஐ.வி. வந்தது தெரியவந்துள்ளது. அதிர்ச்சி அளிக்கும் இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Radio